இந்தியன் என்ற பெருமை எனக்கும் உண்டு!

independence day kavithai in tamil

அகிம்சை என்னும் தோட்டத்தில்
சுதந்திரம் என்னும் பூக்கள் பூக்க
மண்ணாகி போனிர்களோ
இத்தோட்டத்தினை {தேசம்} காக்க...
என் நாட்டு தியாகிகளே!

- தினேஷ் குமார் எ பி

அக்னி சிறகுகள்

abdul kalam kavithai

உன் சரிதம்: இம்மண்ணுலகில் சென்றாலும்...
உன் புகழ் விண்ணுலகம் பாடும்!
விதை ஒன்று புதைந்தது இன்று...
நாளை வெளி வரும் பல இளம் கன்று!

- தினேஷ் குமார் எ பி

அது ஒரு அப்துல் கலாம் {கலாம்)


abdul kalam tamil kavithai

இம்மண்ணுலக காந்த சக்தியே...
மாணவர்களின் ஊந்து சக்தியே...
ஒரு கண்டுபிடிப்பின் தாய்? தேவை!
தேவைகள் அனைத்தும் தந்ததால்...

நீ தெய்வத்திடம் சென்றாயோ? என் தெய்வமே!

- தினேஷ் குமார் எ பி

விவசாயி இடம் விற்பனைக்கு

 இடம் விற்பனைக்கு விவசாயி

இம்மண்ணில் நெற்கதிர் நட்டேன்,
காய் ,கனிகளை பயிரிட்டேன்,
பருப்பு சாகுபடி செய்தேன்,
கம்பு, வேர்கடலை விளைவித்தேன்,
விற்கவில்லை!
ஆனால் கல் தான் நட்டேன்...
இடம் விற்பனைக்கு என
விற்றுவிட்டது!
இப்படிக்கு வருத்ததுடன் விவசாயி...

தினேஷ் குமார் எ பி

1.  ஒரு ஏக்கர் கரும்பு போட்டா - 6,000 ரூபாய்.
2.  ஒரு ஏக்கர் வாழை போட்டா - 9,000 ரூபாய்.
3.  ஒரு ஏக்கர் நெல் போட்டா - 15,000 ரூபாய்.
4.  ஒரு ஏக்கரை பிளாட்டா (PLOTS) போட்டா - 1.6 கோடி ரூபாய்

என் நண்பன்!

birthday kavithai friend in tamil

ஈவுலகில் நான் இருந்தாலும் இல்லை என்றாலும்
எனது தாய்க்கு இன்னொரு மகன் இருப்பன் அவன் என் நண்பன்!

தினேஷ் குமார் எ பி

கண்ணில் பட்ட கவிதை

kan patriya kavithai

கண்ணில் பட்டவை அனைத்தும் காட்சிபடுதுகிறேன்!
ஏன் கைபேசியின் வழியாக...
காட்சிப்படுதுவதை கவிதையாகின்றன.
ஏன் கற்பனை வழியாக...
என் கற்பனைகளை அனுப்பிவிட்டேன் கவிதையாக...
இதோ இணைத்துள்ளேன் எனது காதலை....
இணைய வழியாக...

தினேஷ் குமார் எ பி

கண்ணில் விழுந்தவன் என் காதலன்

kadhalan tamil kavithaigal

நி பார்க்கும் பார்வையில் ஆயிரம்
கவிதை வீசி செல்கிறாய் என்மேல் உனது விழியின் வழியாக
அதிலிருந்து எடுத்துப்படித்தேன் ஒன்று...
அந்த கவிதை - என்
கண்ணில் விழுந்தவன் என் காதலன் நீதானட...

தினேஷ் குமார் எ பி

முத்தம் தரும் தருணம்!

kissing love kavithai

நான் முத்தம் தரும் தருணம்!
நீ போடா என்கையில்...
ஏன் பக்கம் வாட என்று கேட்கிறது எனது காதில்!

தினேஷ் குமார் எ பி

உனது புன்னகையில் அழகு

tamil kavithai amma

ஒரு தாய்மையின் பூரிப்பு!
உனது புன்னகையில் எத்தனை இனிமை காண்கிறேன்...
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது ? அமுதே!
உன் அன்பு கலந்த சிரிப்பில் நான் அடிமையாகிறேன்...
நான் எழுதித்தருகிறேன் அடிமை - சாசனம்
அன்பு கலந்த முத்ததில்...

தினேஷ் குமார் எ பி

உனது சிரிப்பில் சிந்திய கவிதை!

Tamil Kathal Kavithai Beautiful

எனது விரல்களில் வழியும் கவிதை - நீ
வழிந்த கவிதைகள் அனைத்திலும் - நீ
காலை விடியலில் குட்டி கனவுகள் - நீ
எனது கனவுகள் எல்லாம் - நீ
குழந்தை இதழில் மலரும் மலர்கள் - நீ
மலர்ந்த மலர்கள் அனைத்திலும் - நீ
மண்ணில் விழும் மழைத்துளி - நீ
விழுந்த மழைதுளி அனைத்திலும் - நீ
காற்றில் ஏழும் சுவாசம் - நீ
உன் சுவாசத்தில் உயிர் வாழும் ஜீவன் நான்!

தினேஷ் குமார் எ பி

சந்தேகம் எனது கவிதைக்கு

kavithaikal in tamil for love

என்னவள் சந்தேகம் ஏன்?
பெண்கள் கவிதை எழுத விரும்புவதில்லை என்று ?
நான் கேட்டேன் கவிதைகள்
அனைத்தும் தன்னை பற்றி எப்படி எழுதும் என்று ?
என்னவள் கவிதை சிரித்தால்
எதுகை முனை இலக்கிய தமிழில்!


இனிப்பான கண்ணிர் இந்த காதல்

kanneer desam kavithai in tamil

நான் தனிமையில் அழும்போது
என் கண்ணிர் உப்பகின்றன... அதுவே!
உன்னை நினைத்து உருக்கும் பொழுது!
அந்த கண்ணீரும் இனிக்கின்றன
உன்னைப்போலவே!
எனது உதட்டில் பட்டவுடன்....

அன்பால் என்னவள்!

anbu kavithai in tamil language
என்னவளுக்கு இதில் எது பிடிக்கும் என
எனக்கு மட்டும் தான் தெரியும்... 
அவள் கூட தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை...
ஏன் என்றால் எனக்கு பிடித்தால் மட்டுமே போதும்...
உடனே அது அவளுக்கும் பிடிக்கும் என்பால்!

இதயத்தின் ஏக்கம்!

heart kavithai tamil

நீ இமை மூடி பார்த்து செல்லும்பொழுது...
உதிர்ந்த சருகின் ஓசை எனது இதயத்தில்...
பொறுமையாகவே நடத்து செல்...
ஏன் இதயம் தாங்க...
- Dinesh Kumar AP

நீ என் இமை போன்றவள் !

sweet love poems

எனது கண்களில் கண்ணீர் கசிந்தால் 
கண் இமை முடி 
வரும் கண்ணீருக்கு  
தடை போடுகிறாய் 
அதனால் தான் என்னவோ
 நீ என் கண் இமையகிறாய்...

உன் நினைவுகள் !

kadhal kavithaigal in tamil

தவறான எண்ணங்கள் கூட
என்னிடமிருந்து நீங்கி விடுகின்றன..
என் எண்ணத்தில் உன் எண்ணங்கள்
வைக்கும் போது அன்பே!
                                                                             - AP Dinesh Kumar

நண்பர்கள் அதிகம்

friendship kavithai in tamil

எனக்கு அதிகமான
நண்பர்கள் இருக்கிறார்கள்
என்பதில் எனக்கு
முகநுாலில் {Facebook} அல்ல
முகம் அறிந்து!
                                                              - AP Dinesh Kumar

என் கவிதைகள்!

tamil love sad kavithai photos

நான்
சந்தோஷமாக இருக்கும் போது
கவிதை படிக்கதோனும்.
சோகமாக இருக்கும் போது
எழுததோனும் - நான் படித்ததை விட
எழுதுனதே அதிகம்

சுதந்திர தினம் பள்ளியில்!

Indian independence day kavithai in tamil

அதிகாலை எழுந்து! பள்ளி சீருடை அணிந்து!
ஜாதி ,மதம் பார்க்காமல் கொடியை தாங்கும் குண்டூசி!
மேகங்கள் களைந்து! வருசையில் நின்ற நட்சத்திரம்!
கொடி வான்மேல் உயர்ந்து!
தலைமை ஆசிரியரின் கொடி ஏற்றம்!
சுதந்திர போராட்டத்தில் உயிர் தியாகம்!
செய்தவர்களுக்கு வீர வணக்கம்!
சிறுவர்களின் கலையாட்டம்!
விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு விருது!
ஆட்டம் பாட்டம் முடிந்தவுடன் கைகள் நிறைய இனிப்பு!
ஒவ்வொரு குழந்தை முகத்திலும் சிரிப்பு!

                                                                                - Dinesh kumar AP